வணக்கம், இன்று நாம் வரும்காலங்களில் உலகத்த ஆளப்போகும் தொழில்நுட்பத்தை பற்றியும் அதன் பிற்கால வேலைவாய்புக்களை பற்றியும் பாப்போம். தொழில்நுட்பம் என்பது நம் தினசரி வாழ்க்கையில் ஒன்றாக அமைந்துவிட்டடது. உதாரணமாக காலையில் வைக்கும் அலாரம் முதல் இரவு உணவு சமைக்கும் வரை அனைத்துமே இன்று ஏதோ ஒரு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கிக்கொண்டு வருகிறது.
நீங்கள் தற்போது இந்த பதிப்பை படித்டுகொண்டு இருக்கும் நேரத்தில் ஏதோ ஒரு தொழில்நுட்பம் தனது ஆயுட்காலத்தை இழக்கின்றது. அதே நேரத்தில் நிறைய தொழில்நுட்பம் உருவாக்கிக்கொண்டு உள்ளது,உருவாக்கபட்டும் வருகின்றது. இன்று நிறைய இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகிறார்கள். ஏனென்றல் கல்லூரி படிக்கும்போது கல்லுரிகள் புதிய தொழில்நுட்பத்தை எதுவும் கற்றுத்தருவது இல்லை. அதனால் தான் வேலையின்மை போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன. அதனால் இனி நாம் எதிர்காலத்தில் நமக்கு நம் வாழ்வில் பெரும் பங்களிக்கும் தொழில்நுட்பம் என்ன, இதனை எங்கு இலவசமாக கற்கலாம் என்று இந்த பதிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
1. மொபைல் செயலி வடிவமைப்பு மற்றும் உருவாக்கல் (Mobile Application Development)
மொபைல் செயலி வடிவமைப்பு போன்ற வேலை வாய்ப்பிற்கு இன்று பெரும் அளவில் வரவேற்பு உள்ளது. இன்று நாம் அதிகமாக Smart phone களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியதால், ஒவ்வொரு தொழில்கள் மற்றும் சேவைகளுக்கு தகுந்தாற்போல் செயலி தேவைப்படுகிறது. அதனால் செயலி வடிவமைப்புகளில் நீங்கள் உங்கள் திறமையை வளத்துக்கொண்டாள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செயலி வடிவமைப்பில் நிறைய வகைகள் உள்ளன, அவை மொபைல் இயங்குதளத்தை கொண்டு மாறுபடும். மொபைல் இயங்குதளங்கள் (Android, ioS, Blackberry, chromeOs )போன்ற இயங்குதளங்கள் உள்ளன. மொபைல் செயலி தயாரிக்க ஒவ்வொரு இயங்குதளத்திற்கும் தனி தனி மென்பொருட்கள் உள்ளன. நீங்கள் மொபைல் செயலி எப்படி தயாரிப்பது பற்றி இலவசமாக கற்றுக்கொள்ள நமது வலைதள YouTube சேனல் ஐ Subscribe செய்துகொள்ளவும்.
சேனல் Link : https://youtube.com/c/TechPlant
2. கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)
கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது மிகப்பெரிய கணினியை ஒன்றாக சேர்த்து பல இடங்களில் அமைத்து IT சேவைகளை வழங்குவது கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகும். இப்பொழுது சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனகள் வரை அனைவரும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்படுத்த தொடங்கிவிட்டடனர். தற்போது பயன்படுத்திடும் Gmail, YouTube, Facebook, Drive, Twitter, Amazon போன்ற நிறுவனர்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையை பயன்படுத்தி தான் நம்மிடம் வந்து சேர்க்கிறது.
சேனல் Link : https://youtube.com/c/TechPlant
3. இன்டர்நெட் ஆப் திங்ஸ் (Internet of Things)
இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT) என்பது இயந்திரம் மற்றும் மின்னணு சாதனங்களை இணையம் வாயிலாக இயக்கவும் மற்றும் கண்காணிக்க முடியும். இதை தான் இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்று அழைக்கப்படும். இன்று நாம் வாங்கும் A /C , Washing machine, TV, Bulb , Camera போன்ற சாதனங்களை IoT தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கி கொண்டு உள்ளது.
இப்பொது IoT கிளவுட் கம்ப்யூட்டிங் டெக்னாலஜியிலும் ஒரு சேவையாக வழங்க படுகிறது. தற்போது தொழிற்சாலை கென்றே தனியாக Industrial IoT (இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட் ஆப் திங்ஸ்) உள்ளது. இந்த தொழில்நுட்பத்திற்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.4. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
செயற்க்கை நுண்ணறிவு என்பது ஒரு இயந்திரத்திற்கோ அல்லது கணிணிக்கோ, நம் செய்யும் வேலைகளை சொல்லி கொடுப்பது செயற்கை நுண்ணறிவு. எடுத்துக்காட்டாக வங்கி சேவைகளில் இந்த செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. Google தேடுபொறி கூட இதை பயன்படுத்தி தேவையான விடைகளை நம்முன் எடுத்து கொடுக்கிறது.
செயற்கை நுண்ணறிவை எந்தொரு தொழில்நுட்பத்திலும் இணைத்து பயன்படுத்தலாம். இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவின் பங்கு அதிகமாக வரப்போகிறது. அதனால் இந்த தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டால் பிற்கால வேலைவாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு பற்றி இலவசமாக படிக்க YouTube சேனல் ஐ Subscribe செய்துகொள்ளவும்.
சோகம் என்பது மகிழ்ச்சி என்ற நீருக்கான உனக்குள் சுரக்கும் தாகம்