மாணவர்கள் எப்படி தன் திறமையை தேர்ந்தெடுத்து வளர்த்துக்கொள்வது?

 மாணவர்கள் எப்படி தன் திறமையை தேர்ந்தெடுத்து வளர்த்துக்கொள்வது?

        நம் இந்தியாவில் ஒரு வருடத்திற்கு கோடிக்கணக்கான பட்டதாரி மாணவ மாணவிகள்  பட்டம் பெற்று வருகின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் உள்ளனர். சிலர் படிக்கும் போதே நிறுவனத்தில் வேலை கிடைத்து விடுகின்றது, ஒரு சிலர் படித்து முடித்தவுடன் வேலைக்காக வெளி ஊர் சென்று தேடி கிடைத்த வேலையை செய்கின்றனர். ஒரு சிலர் வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவாகின்றது. 



இதற்க்கு காரணம் மாணவர்களிடையே சரியான பாதையை தேர்ந்தெடுக்காமல் இருப்பது, அல்லது சரியான பாதையை தேர்ந்தெடுத்தும் சரியான பள்ளி கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதில் தான் இன்று தவறு செய்து கொண்டு உள்ளோம். சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கனவு எது என்று தெரிந்துகொள்ளாமல் அவர்களின் கனவிற்கு படிக்க வைப்பது போன்ற செயல்கள் தான் இந்த பிரச்சனைக்கு பெரிய பங்கு வகிக்கின்றது. 

"எடுத்துக்காட்டாக இன்று நம் தமிழ் நாட்டில் இருக்கும் பெரு நிறுவனங்களின் உரிமையாளர்களின் வாழ்கை கதையை தேடி பாருங்கள். அவர்கள் சிறு வயதிலிருந்து வறுமையில் தான் வாழந்து இருப்பர்கள். அனால் இன்று மிகப்பெரிய நிறுவனத்தின் நிறுவனர்கள் "

அது எப்படி சாத்தியம்? நன்கு ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் நம் சமுதாயத்தில் இருக்கும் பெரிய பிரச்சனைக்கு அவர்களின்  திறமை மற்றும் கற்றுக்கொண்ட பாடம் இதனை பயன்படுத்தி ஒரு தீர்வு கொடுத்து இருப்பார்கள். அந்த திறமையே அவைகளின் வாழ்க்கையில் முன்னேற பெரும் வாய்ப்பை கொடுத்தது. 

சரி, இப்பொது நம் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று பாப்போம். 

செய்யவேண்டியவை 

✅முதலில் நீங்கள் விருப்பப்பட்டு செய்யும் வேலைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உதரணமாக [உங்களுக்கு மின்னணு பொருட்களின் மேல் ஆர்வம் இருந்தால் அதனை பற்றி படிக்கலாம்] 
நீங்கள் விரும்பி செய்யும் வேலைகள் மட்டுமே கை கொடுக்கும். கட்டாயத்தின் பெயரில் செய்யும் வேலை மற்றும் படிப்பு நீண்ட நாட்களுக்கு கை கொடுக்காது. 

✅ உங்களுக்கு விருப்பமான வேலையை எப்போதும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது.

✅ஒரே செயலை எப்போதும் செய்யாமல், உங்களுக்கு பிடித்தமான வேலை மற்றோன்று இருந்தாலும் அதனையும் செய்யலாம். உங்களால் இரண்டு வேலையும் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருந்தால் தைரியமாக செய்யலாம். அதற்கான தைரியம் இல்லை என்றால் அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

✅ உங்களால் முடிந்தவரை, செய்யும் வேளையில் புதுமையை புகுத்திக்கொண்டே இருங்கள். உடனே வளர்ச்சி இல்லை என்றாலும் பிற் காலத்தில் கைகொடுக்கும். 

✅ நீ செல்லும் பாதையில் கவனம் சிதறாமல் இரு.

✅ மற்றொருவர் தன் பாதையை தேர்தெடுக்க தெரியாமல் தவித்தார் என்றால் அவர்களுக்கு உதவு. 

✅ வாரத்திற்கு ஒரு புத்தகம் படிப்பது நல்லது.
(வாழ்க்கையை மேம் படுத்தும் புத்தகங்களின் வரிசையை கீழே கொடுத்துள்ளேன்) வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எல்லா புத்தகங்களை படித்து இருக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை  

❌ நீங்கள் முதல் அல்லது எப்போதும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது தடைகள் மற்றும் விமர்சனம் வந்துகொண்டே தான்  இருக்கும். அதனை தூரமாய் தள்ளி வைத்துவிடு, உன் பாதையில் திசை மாறாமல் சென்று கொண்டே இரு. 

❌ உன் நேரத்தை தேவை இல்லாமல் விரயம் செய்யாதே. மற்றொருவருக்கு கொடுக்காதே. ஏனென்றால் நீ செலவு செய்யும் நேரத்தை எப்போதும் வாங்க முடியாது.

❌ இனொருவர் நீ செய்யும் வேலைக்கு போட்டடியாக இருந்தால் , அவர்கள் மீது கவனம் செலுத்தாமல் உன்னுடைய வேலையின் மீது கவனம் செலுத்து. 

❌ முக்கியமாக குருகுவழியை தேர்ந்தெடுக்கதே, அது நிரந்தர தீர்வு அல்ல. 

மேலும் 4 புத்த்க்கங்களை பரிந்துரை செய்கிறேன். புத்தகத்தின் மீது நீங்கள் செய்யும் முதலீடு என்றும் வீண்போகாது. 


சூரியனை விட ஒளி நிறைந்தது உன் அறிவு

Previous Post Next Post

نموذج الاتصال