இன்று நாம் இனைய பயன்பாடு மொபைல் மற்றும் கேபிள்களை பயன்படுத்தி உபயோகித்து வருகிறோம். அனால் நாளுக்கு நாள் பயனாளர்கள் அதிகரித்து வருவதால் இனைய சேவை வழங்கும் நிறுவனங்களால் தரமான சேவையை வழங்க முடிவதில்லை. சில இடங்களில் சேவையை விரிவு படுத்த முடியாமல் போய்விடுகிறது. இந்த பிரச்சனையை நிறைய மக்கள் நிறுவனக்களிடம் முன் வைத்து இருந்தனர்.
நிறுவங்கள் அடுத்த ஆண்டு 5ஜி மற்றும் Fiber cable மூலமாக இணையசேவை வழங்க இருக்கும் கட்டத்தில் தற்போது Elon-Musk ன் நிறுவனம் Space-X (Starlink) என்ற Project மூலம் செயற்கைகோள் வழியாக இனைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த சேவை முதலில் USA , Canada போன்ற இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்தனர்.
தற்போது சில நாடுகளுக்கு Starlink சேவையை அறிமுகம் செய்து கொண்டுஉள்ளனர். தற்போது starlink சேவை 2022-ம் ஆண்டு இந்தியாவிற்கு வரும் என்று செய்தி வெளியாகி உள்ளது. இப்பொது அதற்கான முன்பதிவை Starlink Website ல் செய்துகொள்ளலாம். Deposit தொகையாக $99 டாலர்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 7300/-.
இந்தியாவில் ஒருசில இடங்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கிறது, இனி இந்தியா முழுவதும் இந்த சேவையை விரிவாக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டே இருக்கிறது என்று Starlink தரப்பில் கூறப்பட்டுள்ளது. Starlink இனைய வேகம் 1GBps வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கேட்க தயங்கி எதையும் இழக்காதே